பெல்ஜியம் கார் பந்தய போட்டியிலும் அஜித் சாதனை.. இந்தியாவுக்கு மீண்டும் பெருமை..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஏற்கனவே துபாய் மற்றும் இத்தாலியில் நடந்த கார் ரேஸ் போட்டியில் மூன்றாவது இடம் பிடித்து அஜித் இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த நிலையில், தற்போது பெல்ஜியம் நாட்டில் நடந்த கார் போட்டியிலும் இரண்டாவது இடம் பெற்று அஜித் அணி சாதனை செய்துள்ளது. இதனையடுத்து அஜித்துக்கும் அவருடைய அணிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித், ஒரு பக்கம் சினிமாவில் பிசியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் கார் ரேஸ் மற்றும் மோட்டார் ரேஸ் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக சமீப காலத்தில் அவர் துபாய் மற்றும் இத்தாலியில் நடந்த கார் ரேஸ் போட்டியில் அவரது அணி மூன்றாவது இடம் எடுத்து சாதனை செய்தது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் தற்போது அவர் பெல்ஜியம் நாட்டில் நடந்து வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டிருக்கும் நிலையில், இதில் அவரது அணி இரண்டாவது இடம் பிடித்து சாதனை செய்துள்ளது. இந்த சாதனையை அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ள நிலையில், அஜித்துக்கும் அவருடைய அணிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com