இன்று அஜித்துக்கு முக்கியமான நாள்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஒரு பக்கம் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல், அஜித் தனது அடுத்த கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார் என்பதும், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கூட ஐரோப்பிய கார் சீரிஸ் போட்டியில் அஜித் கலந்து கொண்டிருக்கும் வீடியோ வெளியானது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில், அஜித் தற்போது பெல்ஜியம் நாட்டில் நடைபெறும் கார் ரேஸ் போட்டிகளில் இன்று கலந்து கொள்ள இருப்பதாகவும், இன்று அவருக்கு ஒரு முக்கியமான போட்டி என்றும், அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
இந்த கார் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பு, அவர் சவாலுக்கு தயாராகும் வீடியோவையும் வெளியிட்டுள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இன்றைய போட்டியில், அஜித் வெற்றி பெற, அவருடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்க ஐந்து முன்னணி நிறுவனங்கள் காத்திருப்பதாகவும், அதே போல் சில இயக்குனர்கள் முன்வந்துள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. அஜித் கார் ரேஸ் போட்டிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பியதுதான், அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Ajith Kumar, trackside today at Circuit de Spa, Belgium.
— Suresh Chandra (@SureshChandraa) April 16, 2025
Soaking in the atmosphere, gearing up for the endurance challenge ahead.#AjithKumar #AjithKumarRacing #CircuitDeSpa #EndurancePrep #RacingSpirit pic.twitter.com/ZaMfttip8R
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com