மும்பையில் போனிகபூரை சந்தித்த அஜித்: வைரல் புகைப்படம்!

மும்பையில் உள்ள போனி கபூரின் அலுவலகத்திற்கு அஜித் சென்று அவரை சந்தித்ததாக புகைப்படத்துடன் கூடிய தகவல் வெளியாகியுள்ளது.

போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பதும் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நிபந்தனைகளில் தளர்வு ஏற்பட்டவுடன் இந்த படம் ரிலீஸாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார் என்று ஏற்கனவே செய்திகள் உறுதிசெய்யப்பட்ட நிலையில் நேற்று மும்பையில் உள்ள போனி கபூரின் அலுவலத்திற்கு அஜித் சென்று அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து உள்ளார். ’அஜித் 61’ படத்தின் படப்பிடிப்புக்கு முன்னர் இந்த சந்திப்பு நடந்துள்ளதை அடுத்து இந்த படம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் போனி கபூர் தனது சமூக வலைத்தளத்தில் தன்னை அஜித் மும்பை அலுவலகத்தில் சந்தித்ததாக கூறி புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘அஜித் 61’ படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

More News

எதிர்பாராததை எதிர்பாருங்கள்: பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்தான்!

கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் இன்று பிக் பாஸ் கிராண்ட் பினாலே விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு

வெங்கட்பிரபுவின் அடுத்த பட டைட்டில்-பர்ஸ்ட்லுக்: ஹீரோ இவர் தான்!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் வசூலில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது

'குக் வித் கோமாளி சீசன் 3': அஸ்வின் இடத்தை பிடிக்கின்றாரா சிவகார்த்திகேயன் நண்பர்?

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் ஹீரோவாக கிட்டதட்ட அஸ்வின் காணப்பட்டார் என்பதும் அவருடன் ஜோடி போட ஷிவாங்கி, சுனிதா, பார்வதி உள்பட ஒருசில கோமாளிகள் மிகுந்த ஆர்வம் காட்டினார்

கமல்ஹாசனின் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு: ஹீரோ இந்த பிரபலமா?

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது 'இந்தியன் 2' 'விக்ரம்' ஆகிய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் இந்த படங்களை முடித்துவிட்டு அவர் 'தலைவன் இருக்கிறான்'

ஐந்து இறுதி போட்டியாளர்களுக்கும் கமல்ஹாசன் கொடுத்த பரிசுகள் என்னென்ன தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்து விடும் என்பதும் நாளை