close
Choose your channels

சாதனை பெண் மாரல் யாஜர்லு உடன் மீண்டும் அஜித் சந்திப்பு: வைரல் புகைப்படங்கள்!

Friday, September 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உலகை பைக்கில் சுற்றி வந்த இளம்பெண் மாரல் யாஜர்லு என்பவரை சந்தித்தார் என்பதும், அதுகுறித்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது மீண்டும் தல அஜித், மாரல் யாஜர்லு அவர்களை டெல்லியில் சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தல அஜித் நடித்து முடித்துள்ள ’வலிமை’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள நிலையில் அவர் மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அவர் உலக நாடுகளுக்கு பைக்கில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காகத்தான் ஏற்கனவே உலகைச் சுற்றி வந்த இளம்பெண் மாரல் யாஜர்லு அவர்களை சந்தித்து ஆலோசனை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வெளியான ’வலிமை’ திரைப்படத்தின் வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் இந்த வீடியோ வெளியாகி இன்னும் 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் சுமார் 6 மில்லியன் பேர் இந்த வீடியோவை பார்த்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.