'கோட்' படத்தில் இணைந்த அஜித் பட நடிகை.. வெங்கட்பிரபுவுடன் எடுத்த புகைப்படம் வைரல்..!

  • IndiaGlitz, [Wednesday,January 24 2024]

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் அஜித் படத்தில் நாயகியாக நடித்த பிரபல நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’கோட்’. இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற இருப்பதாகவும் அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ஒரு மிகப்பெரிய நட்சத்திர கூட்டம் நடித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகை கனிகா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் நடித்த ’வரலாறு’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள கனிகா, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’எதிர்நீச்சல்’ சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கட் பிரபுவுடன் இணைந்து பணி புரிவதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று வெங்கட் பிரபுவுடன் இருக்கும் புகைப்படத்தை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அவர் ’கோட்’ படத்தில் இணைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி என ஏராளமான நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது கனிகாவும் இணைந்துள்ளதை அடுத்து, இன்னும் யாரெல்லாம் இந்த படத்தில் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

#TheGOAT ஹேஷ்டேக்குடன் வெங்கட் பிரபு பகிர்ந்த புகைப்படம்.. ஏதோ அப்டேட் இருக்குது..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' என்ற படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு தனது சமூக வலை தளத்தில் #TheGOAT என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்து, அவரும் யுவன் சங்கர் ராஜாவும் இருக்கும் புகைப்படத்தை

'எல்.ஐ.சி' படப்பிடிப்பை தொடங்கினார் விக்னேஷ் சிவன்.. லொகேஷன் எது தெரியுமா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் 'எல்ஐசி' அதாவது 'லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்' என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

கார் ரேஸ் மட்டுமல்ல.. பேட்மிண்டனிலும் கில்லி தான்: சாம்பியன் பட்டம் பெற்ற தமிழ் நடிகை..!

தமிழ் நடிகை ஒருவர் ஏற்கனவே கார் ரேஸில் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது

அடுத்த பாய்ச்சலுக்கு கிளம்பிவிட்டாரா கணியன் பூங்குன்றனார்? விஷால் கொடுத்த சூப்பர் அப்டேட்..!

விஷால் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவான 'ரத்னம்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக இன்று காலை விஷால் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது அடுத்த பட

கட்டா குஸ்திக்கு பின்,  மீண்டும் இணையும் விஷ்ணு விஷால் -இயக்குநர் செல்லா 

2022 ஆம் ஆண்டில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற “கட்டா குஸ்தி” திரைப்படக்கூட்டணி மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறது. முன்னணி நட்சத்திர