close
Choose your channels

அஜித்தின் புதிய கெட்டப்.. குடும்பத்துடன் இருக்கும் மாஸ் புகைப்படம் வைரல்!

Thursday, December 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அஜித் கடந்த சில மாதங்களாக ’துணிவு’ படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் அந்த படத்தின் கேரக்டருக்காக நீண்ட தாடியுடன் காணப்பட்டார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ’துணிவு’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டதை அடுத்து அஜித் தாடியை எடுத்துவிட்டார். அது குறித்த புகைப்படங்கள் சமீபத்தில் வைரல் ஆனது.

இந்த நிலையில் தற்போது தாடி எடுத்து க்ளீன் ஷேவுடன் தலைமுடியின் கலரை மாற்றி உள்ள புதிய கெட்டப்பில் அஜித் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் அஜீத் தனது மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகளுடன் உள்ளார். இந்த மாஸ் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’கே 62 படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்க உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தின் கேரக்டருக்காக அஜித் தயாராக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.