close
Choose your channels

அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் இவர்கள் தானா?

Thursday, June 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்து வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் மீதி உள்ள படப்பிடிப்பு வெளிநாட்டில் படமாக்க வேண்டி இருப்பதால் படக்குழுவினர் காத்திருப்பதாகவும், ஆனால் வெளிநாட்டில் படமாக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் இந்தியாவிலேயே ஏதாவது ஒரு இடத்தில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ’வலிமை’ படத்தை முடித்தவுடன் அஜித்தின் அடுத்த படம் எது என்ற கேள்வி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் மீண்டும் அஜித் படத்தை எச்.வினோத் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை போனிகபூரே தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் அஜித் போனிகபூர் எச்.வினோத் கூட்டணி மூன்றாம் முறையாக இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் இந்த படம் ஒரு குறுகிய கால தயாரிப்பு என்றும் 45 நாட்களில் இந்த படத்தின் மூலம் ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ’வலிமை’ படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட அதிகமாகி விட்டது என்றும், அதேபோல் எதிர்பார்த்த காலத்திற்குள் படப்பிடிப்பை முட்க்க முடியாததால் தயாரிப்பாளருக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நஷ்டத்தை சரிகட்ட மீண்டும் போனிகபூருக்கு ஒரு படத்தில் நடித்து கொடுக்க அஜித் முடிவு செய்துள்ளதாகவும் அந்த படம்தான் அஜித்தின் அடுத்த படம் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.