தனுஷ் அல்ல, தனுஷ் பட இயக்குனரின் அடுத்த படத்தில் தான் அஜித்? இன்னொரு ஃபேன்பாய் சம்பவம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித்தின் அடுத்த படத்தை தனுஷ் இயக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருந்த நிலையில், தனுஷ் அல்ல, தனுஷ் படத்தை இயக்கிய இயக்குனர் ஒருவர் தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அஜித் நடித்த 'குட் பேட் அக்லி’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அவருடைய அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இன்னொரு படத்தில் அஜித் நடிக்க இருப்பார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், அஜித்துக்கு தனுஷ் ஒரு கதை கூறியுள்ளதாகவும், அவர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், தனுஷ் நடித்த 'வாத்தி', துல்கர் சல்மான் நடித்த 'லக்கி பாஸ்கர்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படத்தில் அஜித் நடிக்க இருப்பதாகவும், இது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இயக்குனர் வெங்கி அட்லுரி தற்போது சூர்யாவின் 46வது படத்தை இயக்க ஆரம்பக் கட்ட பணிகளை செய்து வருவதாகவும், இந்த படத்தை முடித்தவுடன் அவர் அஜித் படத்தை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், அஜித் படத்தை இயக்குவது யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே அந்த தகவல் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கி அட்லுரி ஏற்கனவே அஜித்தின் ரசிகர் என்று கூறப்படும் நிலையில் அஜித் படத்தை அவர் இயக்கினால் இன்னொரு ஃபேன்பாய் சம்பவம் உறுதி என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com