close
Choose your channels

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் விக்னேஷ் சிவன் தான், ஆனால்.. படக்குழு எடுத்த அதிரடி முடிவு!

Sunday, January 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் என்றும் ஆனால் அது அஜித்தின் 63வது படமாக உருவாகும் என்றும் செய்தி வெளியாகி உள்ளது.

அஜித் நடித்த இருக்கும் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் கூறப்பட்டது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் கூறிய கதை அஜித் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு திருப்தி இல்லை என்பதால் இன்னும் சில காலம் எடுத்துக் கொண்டு நல்ல கதையை தேர்வு செய்ய அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அஜீத்தின் 63வது படத்தை அவர் இயக்குவார் என்றும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் அஜித்தின் 62 வது படத்தை மகிழ்திருமேனி இயக்குவார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான உதயநிதி ஸ்டாலின் நடுத்த ‘கலகத்தலைவன்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதனையடுத்து அஜித்தின் அடுத்த படத்தை இயக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யின் படத்தை மகிழ்திருமேனி இயக்கவிருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன் கூறப்பட்டது. ஆனால் அந்த படம் காலதாமதம் ஆன நிலையில் அஜித்தை இயக்க இருக்கும் மகிழ்திருமேனி, விஜய்க்கு கூறிய கதையை தான் அஜித்திடமும் கூறியிருக்கிறாரா? விஜய் நடிக்க இருந்த படத்தில் தான் அஜித் நடிக்கிறாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் அஜித் - விக்னேஷ் சிவன் திரைப்படம் டிராப் ஆகவில்லை என்றும் அஜித்தின் 63 வது படமாக அந்த படம் நிச்சயம் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.