close
Choose your channels

தமிழகம் முழுவதும் அஜித் திறக்கும் ஹோட்டல்கள்: ரசிகர்கள் ஆச்சரியம்!

Tuesday, May 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகம் முழுவதும் ஹோட்டல்கள் திறந்து அதை நிர்வாகம் செய்யும் ஒரு கேரக்டரில் அஜித் தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் தற்போது நடித்து கொண்டிருக்கும் ’அஜித் 61’ திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகவும் ஒரு கேரக்டர் வங்கியை கொள்ளை அடிக்கும் கொள்ளையர் என்றும் இன்னொரு கேரக்டர் காவல்துறை அதிகாரி என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ’அஜித் 62’ திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் கதையை அவர் முடித்து எழுதி முடித்து விட்டதாகவும் திரைக்கதை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது .

இந்த நிலையில் தற்போது ‘அஜித் 62 படத்தின் கதை குறித்த தகவல் கசிந்துள்ளது. இந்த தகவலின்படி ‘அஜித் 62 திரைப்படத்தில் தமிழகம் முழுவதும் உணவு நிறுவனங்கள் நடத்தும் ஒரு கேரக்டரில் அஜித் நடிக்க இருப்பதாகவும் இந்த கேரக்டர் ஒரு சவாலான கேரக்டர் என்றும், ஒரு சாதாரணமான குடிமகன் கடுமையான உழைப்பு மற்றும் திறமையால் படிப்படியாக உயர்ந்து உச்சத்திற்கு செல்லும் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அஜித் இளமையான தோற்றத்தில் இருப்பார் என்றும் கூறப்படுவதால் ’அஜித் 62’ படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.