டயர் வெடித்த போதும் தளராமல் கார் பந்தயத்தை தொடர்ந்த அஜித்.. அதுதான் தல..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் அஜித், கார் பந்தயத்தில் கலந்து கொண்ட நிலையில், அவரது காரின் டயர் வெடித்து சிதறியது. ஆனால், மனம் தளராமல் வேறு டயரை மாற்றிய அவர், கார் பந்தயத்தில் தொடர்ந்து பங்கேற்றார். இதையடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
நடிகர் அஜீத், தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் பந்தய போட்டியில் கலந்து கொண்டுள்ளார். போர்சியா அணி சார்பில் பங்கேற்றுள்ள அவர், கலந்து கொள்ளும் போட்டியின் இரண்டாவது சுற்று இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில், அஜித் வேகமாக காரை ஓட்டிச் சென்ற போது, திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் விபத்தில் சிக்கியது. ஆனால், அஜித்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து, கார் சர்க்யூட்டில் நின்ற பிறகு, டயர் மாற்றப்பட்டு மீண்டும் அஜித் பந்தயத்தில் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டயர் வெடித்த போதும் மனம் தளராமல் கார் பந்தயத்தை தொடர்ந்த அஜித்தின் மன தைரியத்தை பார்த்து, ரசிகர்கள் "அதுதான் தல!" என்று கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com