'துணிவு' பட புரமோஷனில் அஜித்? நடந்தால் நிச்சயம் அதிசயம் தான்!

  • IndiaGlitz, [Monday,October 31 2022]

நடிகர் அஜித் கடந்த பல வருடங்களாக தனது படத்தின் புரமோஷனில் கலந்து கொள்ள மாட்டார் என்பதும் அது மட்டுமின்றி தனது படத்தின் பூஜையில் கூட அவர் கலந்துகொள்ள மாட்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அஜீத் நடித்து முடித்துள்ள ’துணிவு’ படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷனில் அஜித் கலந்துகொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

’துணிவு’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியை சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் பெற்று உள்ளதால் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

முதல் கட்டமாக இந்த படத்தின் முக்கிய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அஜீத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அஜித் இது குறித்து விரைவில் முடிவு எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

ஒருவேளை அஜித் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவு செய்தால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் புரமோஷன் செய்யும் அதிசயம் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அஜித் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வது அவரது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும்.


 

More News

ராபர்ட்-ரக்சிதா செல்லச்சண்டை: பஞ்சாயத்து செய்த ஷெரினா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான ராபர்ட் மாஸ்டர் அவ்வப்போது ரக்சிதாவை உற்று நோக்கி பார்த்து வருகிறார் என்பதும் அவரது பார்வையே ஒரு காதல் கலந்த பார்வையாக இருக்கிறது

ரஜினியின் 'தலைவர் 170' படத்தில் இந்த இரண்டு பிரபலங்களா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் ஜெயிலர் படத்தில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த இரண்டு திரைப்படங்களை லைகா நிறுவனம்

நீங்க அசீமை வெளியேற்ற மாட்டீங்க... பிக்பாஸ் மீது பழி சுமத்திய போட்டியாளர்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் படலத்தின் போது நீங்கள் அசீமை எலிமினேட் செய்யமாட்டீர்கள், அதனால் நான் அவரை நாமினேஷன் செய்யவில்லை என ஒரு போட்டியாளர் பிக்பாஸ்

யார் யாரெல்லாம் யாரை நாமினேட் செஞ்சாங்க.. முழு விபரங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களின் நாமினேஷன் பட்டியலில் இடம் பெறும் என்பதும் ஒவ்வொருவரும் இரண்டு போட்டியாளர்களை நாமினேட் செய்வார்கள் என்பதும் தெரிந்ததே

அங்கிள் இந்த படம் ஓடிடியில ரிலீஸ் ஆகுதா? 'கோஸ்டி' டீசர்

காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்த 'கோஸ்டி' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது