பொன்னியின் செல்வன்' கேரக்டர்களுக்கு பொருத்தமானவர் யார்?

  • IndiaGlitz, [Wednesday,May 10 2017]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி, 'பாகுபலி 2' ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியை அடுத்து பெரிய இயக்குனர்களின் பார்வை சரித்திர படங்களின் பக்கம் திரும்பியுள்ளது. இந்த நிலையில் கோலிவுட் திரையுலகம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக எடுக்க முயற்சித்து வரும் திரைப்படம் பிரபல எழுத்தாளர் கல்கி அவர்களின் 'பொன்னியின் செல்வன்' கதை தான். எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல்ஹாசன், மணிரத்னம் ஆகியோர் இந்த கதையை திரைப்படமாக எடுக்க முயற்சித்து ஒருசில காரணங்களால் கைவிட்டனர்.

இந்த நிலையில் 'பாகுபலி' படத்தின் வெற்றியை அடுத்து இந்த படம் ஒருவேளை தயாரானால் இந்த கதையின் நாயகன்களான வந்தியத்தேவன் மற்றும் ஆதித்யகரிகாலன் கேரக்டர்களில் நடிப்பது யார் யார்? என்பது ஒரு மிகப்பெரிய கேள்வி. இந்த இரண்டு கேரக்டர்களில் பின்வரும் ஜோடிகளில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்பதை டுவிட்டரில் (https://twitter.com/igtamil/status/862255860726104064) ஓட்டும், கமெண்ட் பாக்ஸில் கருத்தும் கூறுங்கள் வாசகர்களே!


அஜித் - பவன்கல்யாண்

விஜய் - அல்லு அர்ஜூன்

விக்ரம் - மகேஷ்பாபு

சூர்யா - பிரபாஸ்

More News

அஜித், விஜய்யை அடுத்து ஐரோப்பா செல்லும் தனுஷ்

தல அஜித் தற்போது நடித்து வரும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பிற்காக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பல்கேரியாவில் உள்ளார்.

கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

இன்றைய இளையதலைமுறை ரசிகர்களின் ரசனைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பழம்பெரும் இயக்குனர்கள் பலர் படம் இயக்குவதையே விட்டுவிட்டனர். ஆனால் இளையதலைமுறையினர்களின் ரசனையை புரிந்து கொண்டு இப்போதும் வெற்றிப்படங்கள் கொடுக்கும் ஒருசில இயக்குனர்களில் ஒருவர் கே.எஸ்.ரவிகுமார்...

மும்பையில் உலகப்புகழ் பெற்ற பாப் பாடகரின் இசை நிகழ்ச்சி

கனடாவை சேர்ந்த பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் உலகப்புகழ் பெற்றவர். 21வயதிலேயே உலகின் பல நாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சி நடத்தி மில்லியன் கணக்கான டாலர் சம்பாதித்துள்ளார்.

101 முதியவர்களுக்காக 'பாகுபலி 2' சிறப்புக்காட்சி. ஏ.ஆர்.ரெஹானா ஏற்பாடு

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்பட பலர் நடித்த 'பாகுபலி 2' திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகவுள்ளதை அடுத்து இந்த படம் இதுவரை உலகம் முழுவதும் இதுவரை சுமார் ரூ.1300 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது...