7 கண்டங்கள் 60 நாடுகள், உலகம் சுற்றும் அஜித்.. ரசிகர்கள் கவலை!

  • IndiaGlitz, [Tuesday,October 18 2022]

ஏழு கண்டங்களில் உள்ள 60 நாடுகளில் பயணம் செய்ய அஜித் திட்டமிட்டிருப்பதாகவும் இதனால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் அஜீத் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி பைக் பயணம் செய்வதிலும் விருப்பம் உள்ளவர் என்பதும் அவ்வப்போது கிடைத்த ஓய்வு நேரத்தில் பைக் பயணம் செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

மேலும் அவர் உலகம் முழுவதும் பைக்கில் பயணம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக வகுத்து வருகிறார் என்பதும் இதுகுறித்து அவர் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித்தின் ‘ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர் அவர் 7 கண்டங்களில் 60 நாடுகளில் பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் இதற்காக அவர் ஒன்றரை ஆண்டுகள் செலவிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிது.

எனவே ’ஏகே 62’ படத்திற்கு பின்னர் அவர் சுமார் ஒன்றரை ஆண்டுகள் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பில்லை என்றும், அதன்பின் அவர் நடிக்க ஆரம்பித்தாலும் ‘ஏகே 63’ வெளியாக ஒரு வருடம் ஆகும் என்பதால் கிட்டத்தட்ட அஜித் படம் மூன்று ஆண்டுகள் வெளியாக வாய்ப்பு இல்லை என்று கூறப்படுவதால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இருப்பினும் அஜித்தின் பைக் பயணம் குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு திருப்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தேர்வு கட்டணம் செலுத்த முடியாமல் இருந்த அஜித் ரசிகர்.. உதவி செய்த இசையமைப்பாளர் 

சமீபத்தில் கல்லூரி மாணவி ஒருவரின் தேர்வு கட்டணத்தை செலுத்த பணம் அனுப்பி உதவி செய்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தற்போது அஜித் ரசிகர் ஒருவருக்கு கல்லூரி தேர்வு கட்டணம் செலுத்தி

'வாரிசு' படத்தை தொடர்ந்து மீண்டும் தெலுங்கு தயாரிப்பாளரின் படத்தில் விஜய்?

 பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் தற்போது தளபதி விஜய் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார்

காதலும் காசி நகரமும் இணையும் மாயாஜால புள்ளி: சக்தி ஃபிலிம் பேக்டரி வெளியிடும் 'பனாராஸ்'

கன்னடத்திலிருந்து பான் இந்திய நடிகராக அறிமுகமாகும் ஜையீத் கான் நடிப்பில் தயாராகி இருக்கும் 'பனாரஸ்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை முன்னணி திரைப்பட வெளியீட்டு நிறுவனமான

மாரி செல்வராஜின் அடுத்த படம் இதுவா? உற்சாகத்துடன் தயாராகும் இளம் நடிகர்!

 இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான 'மாமன்னன்' என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்து தகவல் கசிந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு? யாருக்கு அதிக சம்பளம்?

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில் தற்போது இந்நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் முதல் நாமினேஷன் செய்யப்பட்டுள்ள நிலையில்