'குட் பேட் அக்லி' தினத்தில் அடுத்த ப்ராஜெக்ட்டுக்கு தயாரான அஜித்.. வைரல் வீடியோ..!


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித் நடித்த 'குட் பேட் அக்லி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால், இது மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'விடாமுயற்சி’ உள்பட, அஜித்தின் சமீபகால படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், அஜித் ரசிகர்கள் பெரிதும் நம்பியிருந்த படம் 'குட் பேட் அக்லி’ படம் தான்.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்தின் தீவிர ஃபேன்பாய் என்பதால், நிச்சயம் சிறப்பாக செய்து இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், இந்த படத்தின் டிரைலரும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ’குட் பேட் அக்லி’ படம் இன்று உலகம் எங்கும் வெளியான பாசிட்டிவ் ரிசல்ட் கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தின் ரிசல்ட் குறித்து எந்தவித கவலையும் இல்லாமல், அஜித் அடுத்த கார் ரேஸ்க்கு தயாராகும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அஜித் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில், இந்தியாவின் சார்பில் "அஜித் குமார் ரேசிங் குழு’ கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்தது என்பதும் தெரிந்தது. இதனை அடுத்து, இத்தாலியில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியிலும் "அஜித் குமார் ரேசிங் அணி கலந்து கொண்ட நிலையில், அதிலும் மூன்றாம் இடம் பிடித்து அசத்தியது.
இந்த நிலையில், அடுத்ததாக Gt4 European Series-க்கு தயாராகிறார். இதற்காக அவர் காரை தயார் செய்யும் காட்சிகளை வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் மூன்றாவது இடம் பிடித்த அஜித்தின் கார் ரேஸ் அணி, இந்த போட்டியில் முதலிடம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Just an other day in the office. #Workethics pic.twitter.com/23ZvpuxBZW
— Ajithkumar Racing (@Akracingoffl) April 10, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments