அஜித்தை மேடையில் ஆட வைத்த ராஜூ சுந்தரம்: வைரலாகும் அரிய வீடியோ

  • IndiaGlitz, [Friday,July 31 2020]

தல அஜித் அவர்கள் திரைப்படங்களில் நடிப்பதோடு சரி, எந்த ஒரு விழாவிலும் அவர் கலந்து கொள்ள மாட்டார் என்பதும் அவர் நடித்த படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்வதில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே. அஜித் கடைசியாக கலந்துகொண்ட மேடை நிகழ்ச்சி என்றால் அது முன்னாள் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்ட நிகழ்ச்சி தான் என்பதும், அந்த நிகழ்ச்சிக்கு பின் அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை என்றும் எந்தப் பத்திரிகைக்கும் பேட்டி கொடுக்கப் போவதில்லை என்றும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடன கலைஞர்கள் மட்டும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் நிகழ்ச்சி ஒன்றில் அஜித் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது ’நான் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை என்றும் ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு எதனால் வந்திருக்கிறேன் என்றால் டான்ஸர்கள் மற்றும் டெக்னீசியன்களுக்கு மரியாதை செலுத்தவே வந்து உள்ளேன் என்றும் என்னை போன்ற நடிகர்கள் எந்த படத்தின் படப்பிடிப்புக்கு சென்றாலும் எங்களுக்கு பாதுகாப்பாக இருப்பவர்கள் ஸ்டண்ட், டான்ஸ் மாஸ்டர்கள் தான் என்றும் அதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனக்கு பெருமையாக உள்ளது என்றும் கூறினார்.

மேலும் அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென பார்வையாளர்கள் அஜித்தை டான்ஸ் ஆட வேண்டும் என்று கூறினார்கள். உடனே மேடைக்கு வந்த ராஜு சுந்தரம் ஒரு ஸ்டெப்பை போட்டு காண்பிக்க அந்த ஸ்டெப்பை அஜித் ஆடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ஒருசில வினாடிகள் மட்டுமே டான்ஸ் ஆடிய அஜித், ‘நான் ரொம்ப பந்தா காட்ட விரும்பவில்லை, இதுவே போதும்’ என்று அவர் கூறி தனது உரையையும் நடனத்தையும் முடித்து கொண்டார்.