அஜித்தை பார்க்க குவிந்த ரசிகர்கள்: போலீசார் தடியடியால் பரபரப்பு

  • IndiaGlitz, [Saturday,December 01 2018]

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் 'தக்சா' என்ற அமைப்பு ஆளில்லா விமானம் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறது என்பதும் இந்த அமைப்புக்கு தல அஜித் ஆலோசகராகவும் உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஆளில்லா விமான தொழில்நுட்பம் குறித்து மேலும் ஆய்வு செய்ய சமீபத்தில் அஜித் ஜெர்மன் நாட்டிற்கு சென்றிருந்தார்

இந்த நிலையில் நேற்றிரவு ஜெர்மனியில் இருந்து அஜித் சென்னை திரும்பவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதனால் விமான நிலையத்தில் அஜித்தை காண அவரது ரசிகர்கள் குவிந்தனர். அஜித் விமான நிலையம் வந்தவுடன் அவருடன் செல்பி எடுக்க ரசிகர்கள் முண்டியடித்ததால் அவரால் காரில் ஏற முடியவில்லை. இதனையடுத்து அவர் மீண்டும் விமான நிலையத்திற்குள் சென்றார்.

இதனால் ரசிகர்களை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதன்பின் அஜித்தை பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பாக விமான நிலையத்தில் இருந்து காரில் வழியனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்ப்பு ஏற்பட்டது.