close
Choose your channels

ரேஸ் அல்லது சினிமா.. இனிமேல் இரண்டில் ஒன்றுதான்.. அஜித் எடுத்த அதிரடி முடிவு..!

Friday, May 16, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அஜித், ஒருபக்கம் சினிமாவில் நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் கார் ரேஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் ரேஸ்களில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், இனிமேல் கார் ரேஸ் அல்லது திரைப்படம் என இரண்டில் ஒன்றில் மட்டும் முழு அளவில் ஈடுபாடுடன் இருக்கப் போவதாக தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் நடித்த ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில், அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில், அஜித் சமீபத்தில் அளித்த பேட்டியில், "வரும் நவம்பர் மாதம் நான் எனது புதிய படத்தை தொடங்க உள்ளேன். அநேகமாக அந்த படம் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியிட வாய்ப்பு உண்டு," என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "இதுவரை நான் கார் ரேஸ் மற்றும் திரைப்படம் என மாறி மாறி கவனம் செலுத்தி வருகிறேன். இதனால் பல ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே இனி ஒரு நல்ல முடிவை எடுக்க உள்ளேன். ரேஸ் இருக்கும் நேரங்களில் சினிமாவில் நடிப்பதில்லை என்றும், சினிமாவில் நடிக்கும் போது ரேஸில் கலந்து கொள்வதில்லை என்றும் முடிவெடுக்கிறேன்," என தெரிவித்துள்ளார்.

எனவே, ஒரே நேரத்தில் ஒரே துறையில் மட்டும் இனிமேல் அவர் முழு கவனம் செலுத்துவார் என்பது, அவரது இந்த பேட்டியில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், நடிகர் அஜித் துபாயில் நடந்து வரும் 24 ஹெச் ரேஸ் நிகழ்வில் தனது அணியுடன் கலந்து கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment