close
Choose your channels

ஃபுட்பால் மைதானத்தில் அஜித், ஷாலினி மற்றும் ஆத்விக்.. மாஸ் புகைப்படம்..!

Friday, March 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அஜித்தின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்த புகைப்படங்கள் கடந்த சில நாட்களாக அவருடைய மனைவி ஷாலினி அஜித்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி கொண்டிருக்கின்றன என்பதும் அந்த புகைப்படங்கள் இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்து வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சற்றுமுன் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் புதிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அஜித், ஷாலினி மற்றும் ஆத்விக் ஆகிய மூவருமே புட்பால் மைதானத்தில் இருப்பது போலவும் ஆத்விக் காலில் புட்பால் இருப்பது போலவும் உள்ள காட்சி உள்ளது. இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ்கள் குவிந்து வரும் நிலையில் ஆத்விக் ஒரு மிகப்பெரிய கால்பந்து வீரராக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அஜித்தின் திரைப்படம் குறித்த அப்டேட்டுகள் வெளிவரவில்லை என்றாலும் அவரது குடும்பத்துடன் கூடிய புகைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருப்பது அவரது ரசிகர்களுக்கு ஆறுதலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்க இருக்கும் நிலையில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.