அஜீத் தங்கைக்கு ஜோடியாகும் 'மங்காத்தா' நடிகர்

  • IndiaGlitz, [Thursday,July 23 2015]

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் விரைவில் நான்காம் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் ஆரம்பமாகவுள்ளது.


இந்நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பில் அஜீத் மற்றும் லட்சுமி மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பில் லட்சுமி மேனன் கல்லூரிக்கு செல்வது போன்றும், அவருக்கு துணையாக அஜீத் செல்வது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்நிலையில் லட்சுமிமேனன் கல்லூரியில் ஒருவரை காதலிப்பது போன்ற காதல் காட்சிகள் விரைவில் எடுக்கப்படவுள்ளதாகவும், லட்சுமி மேனனின் காதலராக 'மங்காத்தா' படத்தில் அஜீத்துடன் நடித்த அஸ்வின் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அஜீத், ஸ்ருதிஹாசன், கபீர்சிங், அஸ்வின் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திர்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் இந்த படத்தை வரும் தீபாவளி தினத்தில் திரையிட அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடந்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.

More News

நடிகர் விஷால் திடீர் உண்ணாவிரதம்

கேரள மாநிலத்தில் தெருவில் தெரியும் நாய்களால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், இதனால் தெரு நாய்களை கொல்ல வேண்டும்...

தாத்தா சிவாஜியுடன் மோதும் பேரன் விக்ரம்பிரபு?

சிவாஜி குடும்பத்தின் கலை வாரீசான விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளைக்கார துரை...

ஆஸ்கார் நாயகனின் பாராட்டை பெற்ற 'பாகுபலி'

இந்திய சினிமாவில் உள்ள முக்கிய வி.ஐ.பிக்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் என்றால் அது சமீபத்தில் வெளியான...

பெயரை மாற்றி ரீ எண்ட்ரி ஆகியுள்ள பி.வாசு மகன்

ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, சந்திரமுகி, விஜயகாந்த் நடித்த சேதுபதி ஐ.பி.எஸ், சத்யராஜ் நடித்த வால்டர் வெற்றிவேல்...

விஜய்யின் 'புலி'யில் நானும் ஒரு கதாநாயகிதான். நந்திதா

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா என இரண்டு நாயகிகள் இருந்த நிலையில் மூன்றாவது நாயகியாக படத்தில்...