உடம்பை குறைத்து ஸ்லிம் ஆன தல அஜித்! வைரலாகும் புகைப்படம்

  • IndiaGlitz, [Wednesday,May 22 2019]

தல அஜித் நடித்து முடித்துள்ள 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் அவரது அடுத்த படமான 'தல 60' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த படத்தையும் 'நேர்கொண்ட பார்வை' இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ள நிலையில் இந்த படமும் அவரது முந்தைய படங்கள் போலவே ஒரு அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்காக தல அஜித் தனது உடல் எடையை ஆச்சரியப்படும் வகையில் குறைத்துள்ளார். அவரது ஸ்லிம் ஆன லுக் ரசிகர் ஒருவரின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

'வேதாளம்', 'விவேகம்', 'விஸ்வாசம்' ஆகிய படங்களுக்காக எடையை அதிகரித்திருந்த தல அஜித் இந்த படத்திற்காக உடலை ஸ்லிம் ஆக்கியுள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

More News

சூர்யாவின் 'என்.ஜி.கே' சென்சார் தகவல்கள்!

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிய 'என்.ஜி.கே' திரைப்படம் வரும் 31ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள நிலையில் இன்று இந்த படம் சென்சாருக்கு சென்றது

பட்டப்பகலில் சுட்டு கொல்லப்பட்ட 'டிக்டாக்' பிரபலம்

டெல்லியில் டிக்டாக் பிரபலமும் ஜிம் பயிற்சியாளருமான 27 வயது இளைஞர் ஒருவர் மூன்று பேர் கும்பலால் சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்டார்

த்ரிஷாவின் 'ராங்கி' படம் குறித்த முக்கிய அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'பேட்ட', மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் '96' என தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து வரும் நடிகை த்ரிஷா, தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று 'ராங்கி'

ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் நாயகியாகும் பிரபல பாலிவுட் நடிகை

ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள 'கோமாளி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விரைவில் வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஆரம்பமாகிவிட்டது.

22 கேமிரா வைத்து உளவு பார்த்த கணவரை கிரிக்கெட் பேட்டால் மண்டையை பிளந்த மனைவி!

தன்மீது சந்தேகப்பட்டு கேமிராக்கள், தனியார் துப்பறியும் நிறுவனம் ஆகியவற்றின் மூலம் உளவு பார்த்த கணவரை கிரிக்கெட் பேட்டால் மண்டையை உடைத்த மனைவி குறித்த பரபரப்பான செய்தி வெளிவந்துள்ளது