கருணநிதிக்கு அஜித், சூர்யா அஞ்சலி: அமெரிக்காவில் இருந்து விஜய் திரும்புவாரா?

  • IndiaGlitz, [Wednesday,August 08 2018]

திமுக தலைவர் கருணாநிதிக்கு இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்கள் இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர். கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜாஜி ஹாலில் நீண்ட வரிசையில் நின்று தொண்டர்கள் தங்கள் தலைவருக்கு இறுதியஞ்சலி செலுத்த காத்த்திருக்கின்றனர்.

இந்த நிலையில் சற்றுமுன் தல அஜித் சென்னை ராஜாஜி ஹாலுக்கு வந்து கருணாநிதிக்கு தனது அஞ்சலியை செலுத்தினார். அவருடன் அவருடைய மனைவி ஷாலினி அவர்களும் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஐதராபாத்தில் 'விசுவாசம்' படப்பிடிப்பில் இருந்த அஜித், கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த நேற்று படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னைக்கு உடனடியாக திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகர் சூர்யாவும் மறைந்த மாபெரும் தலைவருக்கு அஞ்சலி செலுத்தினார்

மேலும் கருணாநிதிக்கு நடிகர் அதர்வா, இயக்குனர் ஏ.எல்.விஜய், ஸ்டண்ட் சில்வா உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் 'சர்கார்' படப்பிடிப்பிற்காக சமீபத்தில் அமெரிக்கா சென்ற தளபதி விஜய், கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சென்னை திரும்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

கருணாநிதி மறைவு செய்தி கேட்டு பிக்பாஸ் போட்டியாளர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் போட்டியில் பங்கேற்பவர்கள் வெளியுலக தொடர்பே இல்லாமல் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும், நேற்று திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு செய்தியை பிக்பாஸ், போட்டியாளர்களுக்கு தெரிவித்தார்.

அமெரிக்காவில் இருந்து கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்த செய்தி அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக திரையுலகினர் ஆழ்ந்த சோகத்துடன் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

கருணாநிதிக்கு இறுதியஞ்சலி: தலைவர்கள் வரும் நேரம்

திமுக தலைவர் கருணாநிதி நேற்று காலமானதை அடுத்து பெருந்திரளாக திமுக தொண்டர்களும், தமிழக அரசியல்வாதிகளும், திரையுலகினர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இப்போதாவது 'அப்பா' என அழைக்கட்டுமா? ஸ்டாலின் கண்ணீர் கடிதம்

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு அனைவருக்கும் பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக கருதப்படுகிறது.

எம்ஜிஆர் இருந்திருந்து கலைஞர் இறந்திருந்தால்? கமல்ஹாசன் 

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மறைந்த சோகம் திமுக தொண்டர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ள நிலையில் அவருக்கு மெரினாவில் இடமில்லை