close
Choose your channels

ஹாலிவுட்டில் அஜீத்? ஷாலினியின் கவலை

Thursday, July 2, 2015 • தமிழ் Comments

அஜீத் தற்போது நடித்து கொண்டிருக்கும் 'தல 56' படத்திற்காக ஹாலிவுட் ஸ்டைலில் வித்தியாசமான தோற்றத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றாராம். அவரை பார்த்தவர்கள் அனைவரும் ஹாலிவுட் நடிகர்கள் போன்ற தோற்றமளிக்கின்றீர்கள் என்று கூறுவதாகவும், அதற்கு அஜீத் புன்னகை செய்து கொண்டே 'இப்படியே எல்லோரும் கூறினால் என்னை ஹாலிவுட்டுக்கு கொண்டு சென்றுவிடுவார்களோ என்று எனது மனைவி ஷாலினி பயப்படுகின்றார்' என்று சொல்லி அனைவரையும் சிரிக்க வைக்கின்றாராம். இதுபோன்று எந்த ஒரு விஷயத்தையும் ஜாலியாகவும் எளிதாகவும் எடுத்து கொள்ளும் பக்குவம் இருப்பதால்தான் அஜீத்துக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் 'தல 56' படத்திற்காக சென்னை பின்னி மில்லில் அஜீத் நடித்து வரும் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருவதாகவும், இந்த பாடலில் அஜீத் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் செம குத்து நடனம் ஆடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஷோபி மாஸ்டரின் பயிற்சியில் இந்த நடனக்காட்சி படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இந்த பாடல் அஜீத் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், கபீர்சிங் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

Get Breaking News Alerts From IndiaGlitz