close
Choose your channels

அஜித்தின் 'ஏகே 62' படத்தின் நாயகி முன்னாள் உலக அழகியா? அப்ப நயன்தாரா என்ன ஆச்சு?

Tuesday, August 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிக்கவிருக்கும் 62வது படமான ‘ஏகே 62’ என்ற திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்றும் இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளார் என்றும் கடந்த சில மாதங்களாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக அஜித்தின் ‘ஏகே 62’ திரைப்படத்தின் நாயகி முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் என்று கூறப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அஜீத் மற்றும் ஐஸ்வர்யாராய் ஆகிய இருவரும் கடந்த 2000ஆம் ஆண்டு வெளியான ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பதும் 22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தை பிரமாண்டமாக லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்க உள்ளது என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.