close
Choose your channels

அஜித், விஜய்யுடன் நடித்த மந்த்ராவை ஞாபகம் இருக்கா? கணவர், குழந்தையுடன் க்யூட் புகைப்படங்கள்..!

Sunday, April 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த நடிகை மந்த்ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

தெலுங்கு சினிமாவில் ராசி என்ற பெயரில் தமிழ் சினிமாவில் மந்த்ரா என்ற பெயரில் நடித்தவர் நடிகை மந்த்ரா. இவரது உண்மையான பெயர் விஜயா. ஆந்திராவை சேர்ந்த இவர் தமிழில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்த ‘பிரியம்’ என்ற திரைப்படத்தில் 1996 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு விஜய் நடித்த ’லவ் டுடே’ அஜித் நடித்த ’ரெட்டை ஜடை வயசு’ பிரபு நடித்த ’தேடினேன் வந்தது’ உட்பட பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார்

கடந்த 2005ஆம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீஹர்ஷா என்பவரை திருமணம் செய்து கொண்ட பின் அவர் நடிப்பில் இருந்து கிட்டத்தட்ட விலகினார். அதன் பிறகு அவர் சில ஆண்டுகள் கழித்து ’சுயேட்சை எம்எல்ஏ’ ’ஒன்பதுல குரு’, ‘வாலு’, ‘கவலை வேண்டாம்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை மந்த்ராவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்பதும் இந்த குழந்தை குறித்த புகைப்படங்களை அவ்வப்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வரும் நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.