வரவிருக்கும் அஜித், விஜய், சூர்யா படங்களுக்குள் உள்ள ஒரு ஒற்றுமை!

  • IndiaGlitz, [Wednesday,March 16 2022]

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான அஜித், விஜய், சூர்யாவின் அடுத்த படங்களில் ஒரு அபூர்வ ஒற்றுமை இருக்கும் தகவல் தற்போது வெளிவந்துள்ளது

விஜய் நடித்து முடித்துள்ள ‘பீஸ்ட்’ படத்திற்காக பிரம்மாண்டமான செட் போடப்பட்டுள்ளது என்பதும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் இந்த செட்டில் தான் படமாக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் அஜித் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படமான ’அஜித் 61’ திரைப்படத்திற்காக பிரம்மாண்டமான அண்ணா சாலை செட் போடப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பாக ஒரு வங்கியின் செட்டுக்கு படத்தின் கதையில் முக்கியத்துவம் பெறுகிறது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சூர்யா நடிக்க இருக்கும் ’வாடிவாசல்’ திரைப்படத்திற்கும் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு மைதானம் செட் போடப்பட்டு அதில் பெரும்பாலான ஜல்லிக்கட்டு காட்சிகள் படமாக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது .

எனவே ’பீஸ்ட்’, ’அஜித் 61’ மற்றும் ‘வாடிவாசல்’ ஆகிய மூன்று படங்களிலும் செட் முக்கியத்துவம் பெறுகிறது என்பதும், மூன்று படங்களின் பெரும்பாலான காட்சிகள் செட்டில் தான் படமாக்கப்படவுள்ளது என்பது அபூர்வ ஒற்றுமையாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த பட ஹீரோ இவரா? அப்ப மகேஷ்பாபு என்ன ஆச்சு?

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படம் வரும் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும்

அப்படி என்ன சொன்னார் நிரூப்? ஆவேசமாக கத்திய ஜூலி!

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நிரூப் ஜூலியை ஆபாசமாக திட்டியதாகவும், அதனால் ஆவேசமாகிய ஜூலி நிரூப்பை திட்டும் வீடியோ வெளியானதை அடுத்து அப்படி என்னதான் சொன்னார் நிரூப்

இளையராஜாவுடன் முதல்முதலாக இணையும் தேவி ஸ்ரீ பிரசாத்!

இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி சென்னையில் மார்ச் 18ஆம் தேதி தீவு திடலில் நடைபெற உள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

சமந்தா நடிக்க மறுத்த கேரக்டரில் நடிக்கின்றாரா அனுஷ்கா?

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா நடிக்க மறுத்த கேரக்டரில் பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது .

ஐஸ்வர்யா ரஜினியின் 'பயணி': மியூசிக் ஆல்பம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக 'பயணி' என்ற மியூசிக் ஆல்பத்தை இயக்கி வந்தார் என்பதும் இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில்