close
Choose your channels

நல்லா இருங்க.. ஆரோக்கியமா இருங்க,, சந்தோஷமா இருங்க: ரசிகருக்கு வாழ்த்து தெரிவித்த அஜித்!

Wednesday, June 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரசிகர் ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித், ‘நல்லா இருங்க ஆரோக்கியமாக இருங்க சந்தோசமா இருங்க’ என்று கூறிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித் தற்போது வெளி நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்யும் அவரது புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அஜித் சமீபத்தில் பிரிட்டன் நாட்டிற்குச் சென்று இருந்தபோது அங்கிருந்த ரசிகர் ஒருவர் அஜீத்தை அணுகி, ‘தன்னுடைய நண்பர் ஒருவர் உங்களுடைய தீவிர ரசிகர் என்றும், இலங்கையை சேர்ந்த அவருக்கு இன்று பிறந்தநாள் என்றும் நீங்கள் வாழ்த்து தெரிவித்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்' என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக அவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட அஜித் அந்த ரசிகருடன் பேசியுள்ளார். ரசிகருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று கூறிய அஜித், 'நல்லா இருங்க.. ஆரோக்கியமா இருங்க,, சந்தோஷமா இருங்க' என்று கூறினார். அஜித்தின் எதிர்பாராத அழைப்பை கேட்ட லாவன் என்ற அந்த இலங்கை ரசிகர் இன்ப அதிர்ச்சி அடைந்திருப்பார் என்பதை சொல்லவும் வேண்டுமா?

இந்த நிலையில் அஜீத் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஏகே 61’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அஜித், மஞ்சிமா மோகன் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார் என்பதும் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.