துபாய் கார் ரேஸில் இருந்து அஜித் விலகினாரா? சுரேஷ் சந்திரா பதிவால் பரபரப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் அஜித் துபாய் கார் ரேஸில் இருந்து விலகி இருப்பதாக அவரது மேனேஜர் சுரேஷ் சந்திராவின் சமூக வலைத்தளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
துபாயில் நடைபெற்று வரும் கார் ரேஸில் அஜித் பங்கேற்று வருகிறார் என்பதும், அதற்கான பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக, அவர் சமீபத்தில் பயிற்சி செய்த போது ஏற்பட்ட விபத்துக்குள்ளான வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அஜித் கலந்து கொண்ட 24 எச் சீரியஸ் ரேஸ் துபாயில் நடைபெற்று வரும் நிலையில், இந்த ரேசில் அஜித் பங்கேற்க இருந்தார். அதற்கான பயிற்சியையும் அவர் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், தற்போது அஜித் தரப்பிலிருந்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த இரண்டு நாட்களில் துபாய் 24 தொடருக்கான தயாரிப்புகளில் இருந்து அஜித்குமார் விலகியுள்ளார். சமீபத்திய விபத்தின் தாக்கத்தை அஜித்குமார் ரேசிங் மையக்குழு முழுமையாக மதிப்பீடு செய்துள்ளது. இந்த பந்தய வடிவம் மிகவும் கடினமானது. நீண்ட சீசனுக்கு முன்னால் இருக்கும் சவால்களை அணி கருத்தில் கொண்டுள்ளது. எனவே, அணியின் உரிமையாளராகவும், அணியின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் அஜித் அவர்களின் நல்வாழ்வு மற்றும் அணியின் ஒட்டுமொத்த வெற்றி ஆகியவை முதன்மை உரிமைகளாக உள்ளன.
விரிவான ஆலோசனைக்கு பிறகு, குழு தங்கள் உத்தியை மறுபரிசீலனை செய்து சில மாற்றங்களை செய்தது. அதன்படி, வரவிருக்கும் ரேஸ் தொடரில் அஜித் பங்கேற்கவில்லை. இது கடினமான முடிவு என்றாலும், தன்னலமற்ற முடிவை அஜித் எடுத்துள்ளார். இருப்பினும், அவரது அணியினர் இந்த ரேஸில் பங்கேற்பார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
414 and 901 both to be cheered. pic.twitter.com/Z921YOiua4
— Suresh Chandra (@SureshChandraa) January 11, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments