துபாய் கார் ரேஸில் 3வது இடம்: அஜித்துக்கு உதயநிதி, ரஜினி, கமல் வாழ்த்து..!


Send us your feedback to audioarticles@vaarta.com


துபாயில் நடந்த கார் ரேஸ் போட்டியில் அஜித்தின் அணி மூன்றாவது இடம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நிலையில் அவருக்கு அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் துணை முதல்வர் உதயநிதி, உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் தங்களது எக்ஸ் பக்கத்தில் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்
துணை முதல்வர் உதயநிதி: “24H துபாய் 2025, 991-வது பிரிவில் அஜித்குமார் மற்றும் அவரது குழுவினர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து மகிழ்ந்தேன்.அஜித்குமார் மற்றும் அவரது குழுவினருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பெருமைமிகு இந்த ரேஸிங் நிகழ்வில் திராவிட மாடல் அரசின் லோகோவை வெளிப்படுத்தி காட்டியதற்கு நன்றி. நமது தேசத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் மென்மேலும் பெருமை சேர்க்க அஜித்குமாருக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த்: அன்பான அஜித்குமாருக்கு வாழ்த்துகள். நீங்கள் சாதித்து காட்டியுள்ளீர்கள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும். லவ் யூ”
கமல்ஹாசன்: அஜித்குமாரின் ரேஸிங் குழுவினர் அபாரமான சாதனையை நிகழ்த்தியுள்ளனர். எனது நண்பர் அஜித்குமார் தனக்கு பிடித்த விஷயங்களுக்கான எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டே செல்கிறார்.
I am thrilled to hear that Ajith Kumar Sir and his team have secured third place in the 991 category at the 24H Dubai 2025.
— Udhay (@Udhaystalin) January 12, 2025
I extend my heartfelt congratulations to #AjithKumar Sir and his team for this remarkable achievement.
I thank @Akracingoffl for displaying our… pic.twitter.com/udtcaSASqE
Congratulations my dear #AjithKumar. You made it. God bless. Love you.#AKRacing
— Rajinikanth (@rajinikanth) January 13, 2025
Extraordinary achievement by Team #AjithKumarRacing in their maiden race! Thrilled for my friend Ajith, who continues to push boundaries in his diverse passions. A proud and seminal moment for Indian motorsports. pic.twitter.com/DsuCJk4FFB
— Kamal Haasan (@ikamalhaasan) January 12, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments