வெளிநாட்டில் அஜித்தின் பைக் பயணம்: எந்த நாட்டில் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,June 18 2022]

நடிகர் அஜித் ஒரு பைக் பிரியர் என்பதும் அவர் இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் பயணம் செய்து உள்ளார் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் தற்போது இங்கிலாந்து நாட்டில் அஜித் பைக் பயணம் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள சாலைகளில் அஜித் பைக் ஓட்டுவது போன்றும் இங்கிலாந்து சாலைகளில் அவர் பைக்குடன் நிற்பது போன்ற புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றனர். மேலும் அவருடன் அவருடைய பைக் குழுவினரும் இங்கிலாந்து உள்ளனர் என்பது புகைப்படங்களில் இருந்து தெரிய வருகிறது.

சமீபத்திலே ‘ஏகே 61’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த அஜீத் இங்கிலாந்துக்கு பைக் பயணமாக சென்றுள்ளார் என்பதும் இதனை அடுத்து அவர் இந்தியா திரும்பியவுடன் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது. ’ஏகே 61’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் புனேவில் நடைபெற இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் நடிகை மஞ்சுவாரியார் உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் ‘ஏகே 61’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது.

More News

பிரபல இயக்குனரின் படத்தில் நடிகையாகிறார் 'குக் வித் கோமாளி' கனி!

'குக் வித் கோமாளி' சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் கனி, பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார். 

தமிழ் நடிகரை திருமணம் செய்து கொண்ட 'அவன் இவன்' மதுஷாலினி!

பாலாவின் 'அவன் இவன்' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை மதுஷாலினி தமிழ் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். 

'கோலமாவு கோகிலா' இந்தி ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'கோலமாவு கோகிலா' படத்தின் ஹிந்தி ரீமேக் ரிலீஸ் குறித்த தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரஜினிகாந்த் - ஏவிஎம் சரவணன் திடீர் சந்திப்பு: 'சிவாஜி 2' உருவாகிறதா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை ஏவிஎம் சரவணன் தனது குடும்பத்தினருடன் சென்று பார்த்ததை அடுத்து 'சிவாஜி 2' உருவாகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கமல் என்ன கொடுத்தார்? அனிருத்தை அடுத்து விஜய்சேதுபதி கூறிய பதில் இதுதான்!

 உலகநாயகன் கமல்ஹாசன் 'விக்ரம்' படத்தின் வெற்றிக்காக உங்களுக்கு என்ன கொடுத்தார் என்ற கேள்விக்கு விஜய் சேதுபதி கூறிய பதில் தற்போது வைரலாகி வருகிறது.