தல அஜித்தின் பைக் ட்ரிப்… வித்தியாசமான பைக் குறித்து அலசும் அவரது ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Friday,July 23 2021]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் தல அஜித்துக்கு அளவில்லாத ரசிகர்கள் கூட்டம் இருப்பது தெரிந்ததே. எந்த அளவிற்கு என்றால் எங்கோ ஒரு மூலையில் அஜித் பற்றிய பேச்சு அடிப்பட்டால் கூட அஜித் ரசிகர்கள் அதை வைரலாக்கி விடுவர். அந்த அளவிற்கு நடிகர் அஜித் மீது தீவிரப்பற்றுக் கொண்ட அவரது ரசிகர்கள் கடந்த சில தினங்களாக நடிகர் அஜித் போன பைக் டிரிப் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வைராக்கி வருகின்றனர்.

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் “வலிமை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நீண்ட எதிர்ப்பார்ப்புக்கு பிறகு வெளியாகி இருக்கிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கடும் சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வலிமை படத்தின் உருவாக்கத்திற்கு இடையே தல அஜித் பைக் டிரிப் சென்ற புகைப்படங்களை அவரது ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.

சிக்கிம் அருகே தல அஜித் பைக் டிரிப் சென்றதாகக் கூறப்படும் இந்த புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டதா அல்லது முன்பே எடுக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆனால் அந்தப் புகைப்படங்களில் அஜித் ஓட்டிச் செல்லும் BMW R 1200GS அட்வென்சர் பைக் குறித்த ஆர்வம் தற்போது ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டது. இதனால் அந்த பைக்கை குறித்த அம்சங்களை தற்போது ரசிகர்கள் இணையத்தில் அலசி வருகின்றனர்.

இந்நிலையில் தல அஜித் ஓட்டிச்சென்ற BMW பைக் குறித்தும் அதன் சிறப்பம்சம் குறித்தும் ரசிகர்களின் ஆர்வத்திற்காக தொகுக்கப்பட்டு உள்ளது. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

மழைகாலத்தில் பயமுறுத்தும் நோய்கள்… குழந்தைகளைப் பராமரிப்பது எப்படி?

பருவமழை காலங்களில் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளினால் ஏற்படும் டைபாய்டு, டெங்கு, மலேரியா முதற்கொண்டு மஞ்சள் காமாலை வரை பல நோய்கள் குழந்தைகளை தாக்குகின்றன.

ஐஸ்வர்யா ராஜேஷின் 'திட்டம் இரண்டு' டிரைலர்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்த 'திட்டம் இரண்டு' என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது 

செப்டம்பரில் கெளதம் மேனனின் அடுத்த படம் ரிலீஸா?

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மேனன் இயக்கிய 'என்னை நோக்கி பாயும் தோட்டா' என்ற திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது என்பதும்,

வாயை ஜிப் போட்டு மூடுங்கள்: முன்னாள் அமைச்சரை ஜெயிலுக்கு அனுப்பிய நடிகையின் பதிவு!

முன்னாள் அமைச்சரை சிறைக்கு அனுப்பிய நடிகை ஒருவர் தன்னைப் பற்றி நெகட்டிவ் கமெண்ட்ஸ் பதிவு செய்த நெட்டிசன்களை பார்த்து வாயை ஜிப் வைத்து மூடிக் கொள்ளுங்கள் என்று பதிவு செய்துள்ளது

யாஷிகாவுக்கு அதிர்ச்சி, அமலாபாலுக்கு ஆச்சரியம்: பிரேம்ஜியின் டுவிட்

சமீபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த், எஸ்ஏ சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் புகைப்படம் ஒன்றை பதிவு செய்த நிலையில் அதற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு மீம்ஸ் புகைப்படத்தை நடிகரும்