close
Choose your channels

'வேதாளம்' டெக்னிக்கல் டீமை உற்சாகப்படுத்திய அஜீத்

Monday, October 26, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து முடித்துள்ள 'வேதாளம்' திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளிவர வேண்டும் என்பதற்காக அஜீத் உள்பட 'வேதாளம்' படக்குழுவினர் இரவுபகலாக பணிபுரிந்து வருகின்றனர். அஜீத் அதிகாலை 4 மணி வரை டப்பிங் பணிகளை மேற்கொண்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் சமீபத்தில் அஜீத், சிறுத்தை சிவா மற்றும் இந்த படத்தின் டெக்னிக்கல் டீம் ஆகியோர்களை ஜெமினி லேபில் நேரில் சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து இயக்குனர் சிவா தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'இரவு பகலாக 'வேதாளம்' படத்திற்காக தீவிரமாக பணி செய்து வரும் எங்களது டெக்னிக்கல் டீமை அஜீத் நேரில் சந்தித்தது பெரிய எனர்ஜியாக இருந்ததாகவும், தல'க்கு எங்கள் நன்றி என்றும் தெரிவித்துள்ளார். டெக்னிக்கல் டீம் உடன் அஜீத் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சிவா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன்,கபீர் சிங், ராகுல்தேவ், தம்பி ராமையா, சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் அவர்கள் தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.