அஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவில் கிடைத்த சர்ப்ரைஸ்

  • IndiaGlitz, [Thursday,April 06 2017]

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முடிந்து படக்குழுவினர் சென்னை திரும்ப உள்ளனர். மேலும் சென்னையில் ஒரு குழு இந்த படத்தின் டீசரை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அஜித் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸாக 'விவேகம்' படத்தின் புதிய ஸ்டில் ஒன்று வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது. இயக்குனர் சிறுத்தை சிவாவின் அதிகாரபூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் வெளியான இந்த ஸ்டில், சில நிமிடங்களில் டிரெண்ட் ஆகி, தற்போது வரை வைரலாகி வருகிறது.

அஜித் இந்த புதிய ஸ்டில்லில் கையில் ஒரு ஆயுதத்துடன் ஸ்டைலாக நிற்கும் வகையில் உள்ளது. இந்த ஒரே ஒரு ஸ்டில்லுக்கு ஆயிரக்கணக்கில் லைக்குகள், ரீடுவிட்டுக்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

More News

'விவேகம்' படத்தில் அஜித் கேரக்டரின் பெயர்?

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், காஜல அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் நடித்து வரும் 'விவேகம்' திரைப்படம் இன்னும் ஒருசில நாட்களில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கவுள்ளது...

மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' படத்துக்கு கிடைத்த முதல் வெற்றி

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதிராவ் ஹைதி நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், கார்த்தி கூட்டணி மற்றும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் புரமோஷன் ஆகியவை இந்த படத்தின் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்க வைத்துள்ளது...

தயாரிப்பாளர் சங்கத்தை பிடித்த விஷாலால் ஆர்கே நகரை பிடிக்க முடியாதா? : ஆர்யா

நடிகர் விஷால் நடிகர் சங்க தேர்தல் மற்றும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஜெயிக்க முடிந்தபோது ஆர்கே நகர் தேர்தலில் ஜெயிக்க முடியாதா? என்று ஆர்யா நகைச்சுவையுடன் கூறியுள்ளார்...

கலையரசனின் 'எய்தவன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து ரஜினிகாந்த் உள்பட அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றவர் கலையரசன். கோலிவுட் திரையுலகில் முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இவர் நடித்த 'எய்தவன்' படம் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடந்து கொண்டிருந்த ந

தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் ஆர்.கே.நகர் தேர்தல்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் முடிவு அந்த தொகுதியின் வெற்றி வேட்பாளரை மட்டும் முடிவு செய்ய போவதில்லை என்றும் தமிழகத்தின் தலையெழுத்தையே முடிவு செய்ய போவதாகவும் அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்...