குழந்தைகளுடன் நடனமாடும் 'ஏகே 61' நடிகை: வீடியோ வைரல்

அஜித் நடித்துவரும் 61வது திரைப்படத்தில் மஞ்சுவாரியார் நாயகியாக நடிக்கவிருக்கிறார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் மஞ்சுவாரியர் நடித்த மலையாள திரைப்படம் சமீபத்தில் வெளியாக நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து அந்த சந்தோஷத்தில் அவர் குழந்தைகளுடன் நடனமாடிய வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

மஞ்சுவாரியர் முக்கிய வேடத்தில் நடித்த ’ஜாக் அண்ட் ஜில்’ என்ற திரைப்படத்தை இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த 20ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஊடகங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளதால், இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மஞ்சுவாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ஜாக் அண்ட் ஜில்’ திரைப்படம் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றுள்ளதை குறிப்பிட்டு, குழந்தைகளுடன் நடனமாடிய வீடியோவை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதில் ‘நடனத்தை விட வேறு சிறப்பானது எதுவும் இல்லை’ என்றும் அவர் கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

'தளபதி 66' படம் குறித்த சூப்பர் அறிவிப்பு: டுவிட்டரில் வெளியிட்ட புஸ்ஸி ஆனந்த்

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 66' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த படம் குறித்த சூப்பர் அறிவிப்பு ஒன்றை விஜய் மக்கள் இயக்கத்தின்

பிக்பாஸ் சீசன் 6ல் டி இமானின் முன்னாள் மனைவியா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் விரைவில் 6வது சீசன் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது

10 வருடங்களுக்கு பின் மாறாதது இது ஒன்று தான்: கமலுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த ஆண்ட்ரியா!

உலக நாயகன் கமலஹாசனுடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, பத்து வருடங்களுக்குப் பின்னும் மாறாதது இது ஒன்றுதான் என்று நடிகை ஆண்ட்ரியா பதிவு செய்துள்ளார்.

எனது கருவில் பூத்த ஓர் இளைய நிலவு நீ: நயன்தாராவின் வீடியோ வைரல்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'O2' என்ற திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து

'கே.ஜி.எஃப் 2' இயக்குனரின் அடுத்த படத்தில் கமல்ஹாசன்? என்ன கேரக்டர் தெரியுமா?

சமீபத்தில் வெளியான 'கே.ஜி.எஃப் 2'  திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், 1,300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து உள்ளது என்பதும் தென்னிந்திய திரைப்படம்