மீண்டும் அதே இயக்குனர், அதே இசையமைப்பாளர், அதே தயாரிப்பாளர்.. 'AK64' அப்டேட்...!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் அஜித்தின் ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில், அவருடைய அடுத்த படம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில், அவரது அடுத்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.
’குட் பேட் அக்லி’ திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய நிலையில், ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்தார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்த நிலையில் அதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அதே ஜி.வி. பிரகாஷின் இசையிலும், அதே மைத்ரி மூவிஸ் நிறுவன தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் தான் அஜித் நடிக்க உள்ளார் என்றும், அதுதான் ‘AK64’ படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட இந்த தகவல் உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும், 2026 ஆம் ஆண்டு கோடை விடுமுறைகளில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மீண்டும் ’குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றி கூட்டணி ‘AK64’ இணைய இருப்பதால், இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments