close
Choose your channels

அக்னி சிறகுகள்' அக்சராஹாசனின் கேரக்டர் அறிவிப்பு

Thursday, November 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமலஹாசனின் மகளும் நடிகையுமான அக்சராஹாசன் அஜித்தின் ’விவேகம்’ மற்றும் விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ ஆகிய திரைப்படங்களில் நடித்த நிலையில் தற்போது விஜய்ஆண்டனி மற்றும் அருண்விஜய் இணைந்து நடிக்கும் ’அக்னி சிறகுகள்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த படத்தின் முதல் படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் முடிந்து இந்தியா திரும்பியுள்ள படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் அக்சராஹாசனின் கேரக்டர் குறித்த தகவலை படக்குழுவினர் வெளிய்யிட்டுள்ளனர். அக்சராஹாசன் இந்த படத்தில் ‘விஜி’ என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்று அறிவித்ததோடு அக்சராஹாசனின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

மூடர் கூடம்’ நவீன் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி, அருண்விஜய், அக்சராஹாசன், ’அர்ஜுன் ரெட்டி’ நாயகி ஷாலினி பாண்டே, பிரகாஷ்ராஜ், நாசர், பிக்பாஸ் புகழ் மீராமிதுன், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடித்து வருகின்றனர். நடராஜன் சங்கரன் இசையமைக்கும் இந்த படத்திற்கு பாட்ஷா ஒளிப்பதிவும், கிருபாகரன் புருஷோத்தமன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.