close
Choose your channels

அக்சராஹாசனின் அடுத்த பட டீசரை வெளியிடும் ஸ்ருதிஹாசன்!

Wednesday, September 23, 2020 • தமிழ் Comments

உலக நாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன் ஏற்கனவே அமிதாப், தனுஷ் நடித்த ‘ஷமிதாப்’, அஜித் நடித்த ‘விவேகம்’, விக்ரம் நடித்த ‘கடாரம் கொண்டான்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போது அவர் நவீன் இயக்கி வரும் ‘அக்னி சிறகுகள்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அக்சராஹாசன் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை ’டிரண்ட் லவுட்’ என்ற நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் இந்த படத்திற்கு ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்று செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் பழம்பெரும் பாடகி உஷா உதுப் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்சராஹாசனின் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொண்ட கதையம்சம் கொண்ட இந்த படத்தை இயக்குனர் ராஜாகிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கி வருகிறார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது என்றும், இந்த டீசரை அக்சராஹாசனின் சகோதரி ஸ்ருதிஹாசன் வெளியிடவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Get Breaking News Alerts From IndiaGlitz