தந்தை கமலுக்காக செம ஆட்டம் போட்ட மகள் அக்சராஹாசன்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Sunday,April 04 2021]

உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் முதன்முதலாக தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது தெரிந்ததே. அவரை எதிர்த்து பாஜக வேட்பாளராக வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார் என்பதும் இருவருக்கும் இடையே கடும் போட்டி இருப்பதாகவும் வெற்றி பெறுவது யார் என்பது கணிக்க முடியாத அளவில் சம அளவில் இருவருக்கும் வாக்குகள் விழும் என்று கருத்துக்கணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக திரையுலகினர் யாரும் பிரச்சாரம் செய்யவில்லை என்றாலும் அவரது அண்ணன் மகள் சுகாசினி கடந்த சில நாட்களாக கோவையின் ஒவ்வொரு தெருவிலும் பிரச்சாரம் செய்து வருகிறார்

இந்த நிலையில் தற்போது கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசனும் கோவையில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார். அக்சராவும் சுஹாசினியும் தெருவில் குத்தாட்டம் போட்டு வாக்குகளை திரட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது ஆட்டத்தை பார்த்த அந்த பகுதியில் உள்ள பெண்களும் அவருடன் சேர்ந்து ஆடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது,