ரூ.25 கோடியை அடுத்து மீண்டும் பெரிய தொகையை நிதியுதவி செய்த அக்சய்குமார்

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் தாராளமாக நிதி உதவி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி அவர்கள் சமீபத்தில் கேட்டுக்கொண்டார் இதனை அடுத்து டாடா நிறுவனம் ரூ 1500 கோடி, ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.500 கோடி என கோடிக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் நிதி உதவி குவிந்தன என்பது தெரிந்ததே

இந்த நிலையில் பாலிவுட் பிரபல நடிகரும் ரஜினிகாந்த் நடித்த ’2.0’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவருமான அக்சய்குமார் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ 25 கோடி நிதி உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் மேலும் ரூ.3 கோடி மும்பை மாநகராட்சிக்கு நன்கொடை கொடுத்த தகவல் வெளிவந்துள்ளது

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதாரத்துறைக்கு தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்க உதவும் வகையில் மும்பை மாநகராட்சிக்கு அக்சய்குமார் 3 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து அக்சய்குமார் மொத்தம் ரூ.28 கோடி நிதியுதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஊரடங்கு நேரத்தில் புகையிலை எப்படி கிடைத்தது? பிரபல நடிகருக்கு நெட்டிசன்கள் கேள்வி

பிரபல பாலிவுட் நடிகரும் நயன்தாரா நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக நடித்தவருமான அனுராக் காஷ்யப் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோ நெட்டிசன்களால் சர்ச்சை.

250 மூட்டைகள் அரிசி வழங்கி உதவி செய்த P.T.செல்வகுமார்

கொரோனா அச்சத்தால் வீட்டில் முடக்கியிருக்கும் ஏழை மக்களுக்கு கலப்பை மக்கள் இயக்கம் தொடர்ந்து உதவி கரம் நீட்டி வருகிறது.

மே 1 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு: முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் ஊரடங்கு உத்தரவை

உலகம்; ஊரடங்கு உத்தரவில் நசுக்கப்பட்ட பலரது மனிதஉரிமைகள்!!!

கொரோனா பரவல் தடுப்புக்காக உலகிலுள்ள அனைத்து அரசாங்கங்களும் தங்களது மக்களை ஊரடங்கில் இருக்குமாறு அறிவுறுத்துகிறது.

நலிந்த நடிகர்களுக்கு உதவி: நடிகர் சங்கத்தின் தனி அதிகாரியின் அறிவிப்பு

ஊரடங்கு உத்தரவு காரணமாக நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் நலிந்த நடிகர்கள் வறுமையில் வாடுவதால் நடிகர் சங்கத்தின் தனி அதிகாரி, நலிந்த நடிகர்களின் வாழ்வாதாரத்திற்கு