ராமர் பாலத்தை காப்பாத்த நமக்கு வெறும் 3 நாள் தான் இருக்கு.. அக்சயகுமாரின் 'ராம் சேது' டீசர்

அக்ஷய் குமார் நடித்த ‘ராம் சேது’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் தமிழ் டீசர் தற்போது வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள ராமர் பாலம் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படம் த்ரில் திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் வகையில் இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆங்கிலத்தில் ஆடம் பிரிட்ஜ் என்றும், புராண காலத்தில் இருந்து இராமர் பாலம் என்று கூறப்பட்டு வரும் இந்த பாலம் குறித்த உண்மைத் தன்மையை ஆராய செல்லும் ஒரு தொல் பொருள் ஆய்வாளரின் கதைதான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

அக்ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை லைகா நிறுவனம், மேலும் மூன்று நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய், அஜித் படங்களுக்கு அடுத்த இடத்தை பிடித்த 'பொன்னியின் செல்வன்': ஆச்சரிய தகவல்!

2022 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகிற்கு நல்ல ஆண்டு என்றுதான் கூறவேண்டும். இந்த ஆண்டு வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்பதும் தமிழ் சினிமாவின் பல

விஜய் தேவரகொண்டாவுடன் காதலா? க்யூட் பதிலளித்த ராஷ்மிகா மந்தனா!

தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா, விஜய்தேவரகொண்டாவை காதலிப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில்

'பொன்னியின் செல்வன்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? சாதனை வசூல்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்திற்கு சமூக வலைதளங்கள்

நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் நீக்கம்: காரணம் இதுதான்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து நடிகரும் இயக்குனருமான கே பாக்யராஜ் நீக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பு தமிழ் திரைஉலகில் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நாயகியுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. என்ன விசேஷம்?

நாயகியுடன் இணைந்து சிவகார்த்திகேயன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.