close
Choose your channels

நடிகர் அக்சய் குமார் புதிதாக வாங்கியிருக்கும் சொகுசு வீடு… அப்படியென்ன ஸ்பெஷல்?

Tuesday, January 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் அக்சய் குமார் மும்பையின் மேற்கு பகுதியில் புதிதாக வாங்கியிருக்கும் சொகுசு வீடு குறித்த தகவல் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

பாலிவுட்டில் தொடர்ந்து ஹிட் நடிகராக வலம்வரும் நடிகர் அக்சய் குமாரின் “அட்ராங்கி ரே“ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் மும்பையின் மேற்கு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு சொகுசு வீடு வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 1878 சதுரஅடி பரப்பளவுள்ள இந்த வீட்டின் மதிப்பு ரூ.7.8 கோடி எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே கடற்கரை ஒட்டியுள்ள பங்களாவில் குடும்பத்துடன் வசித்துவரும் நடிகர் அக்சய் குமார் நகரப்பகுதியில் வீடு வாங்கியிருப்பதால் புதிய வீட்டிற்கு மாறுகிறாரா? எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் இதற்கு பதிலளித்திருக்கும் அவரின் நெருங்கிய வட்டாரங்கள் ஊடகங்களில் பேசப்படுவதுபோல அடுக்குமாடி குடியிருப்பு ஒரு சொத்தாக வாங்கப்பட்டு இருக்கிறதே தவிர அதில் உள்அலங்காரங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்று கூறியுள்ளனர்.

மேலும்புதிய வீடு குறித்து ஊடகங்களில் வெளியாகிவரும் புகைப்படங்கள் சில செயற்கையானவை என்றும் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.