நடிகர் அக்சய் குமார் புதிதாக வாங்கியிருக்கும் சொகுசு வீடு… அப்படியென்ன ஸ்பெஷல்?

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் அக்சய் குமார் மும்பையின் மேற்கு பகுதியில் புதிதாக வாங்கியிருக்கும் சொகுசு வீடு குறித்த தகவல் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

பாலிவுட்டில் தொடர்ந்து ஹிட் நடிகராக வலம்வரும் நடிகர் அக்சய் குமாரின் “அட்ராங்கி ரே“ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் மும்பையின் மேற்கு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு சொகுசு வீடு வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 1878 சதுரஅடி பரப்பளவுள்ள இந்த வீட்டின் மதிப்பு ரூ.7.8 கோடி எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே கடற்கரை ஒட்டியுள்ள பங்களாவில் குடும்பத்துடன் வசித்துவரும் நடிகர் அக்சய் குமார் நகரப்பகுதியில் வீடு வாங்கியிருப்பதால் புதிய வீட்டிற்கு மாறுகிறாரா? எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் இதற்கு பதிலளித்திருக்கும் அவரின் நெருங்கிய வட்டாரங்கள் ஊடகங்களில் பேசப்படுவதுபோல அடுக்குமாடி குடியிருப்பு ஒரு சொத்தாக வாங்கப்பட்டு இருக்கிறதே தவிர அதில் உள்அலங்காரங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்று கூறியுள்ளனர்.

மேலும்புதிய வீடு குறித்து ஊடகங்களில் வெளியாகிவரும் புகைப்படங்கள் சில செயற்கையானவை என்றும் கூறப்பட்டுள்ளது.

More News

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஓய்வா? பரபரப்பு தகவல்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத நம்பிக்கை

எம்ஜிஆர், சிவாஜி முதல் கார்த்தி வரை நடித்த பழம்பெரும் தமிழ் நடிகைக்கு பத்மஸ்ரீ விருது!

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் முதல் தற்போதைய நடிகரான கார்த்தி வரை பல தலைமுறைகளை கண்ட பழம்பெரும் நடிகைக்கு பத்மஸ்ரீ விருது சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது 

அமேசான், நெட்பிளிக்ஸ் ஓடிடிக்காக 400 கோடி முதலீடு செய்யும் பிரபல நடிகை!

அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளங்களுக்கு 400 கோடிகள் செலவு செய்து திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களை தயாரிக்க பிரபல நடிகை ஒருவர் முன்வந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சிம்புவின் 'பத்து தல' படத்தில் இணைந்த 'மாநாடு' பிரபலம்!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படத்தில் பணிபுரிந்து அனைவரும் பாராட்டுகளைப் பெற்ற பிரபலம் ஒருவர் சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படமான 'பத்து தல' என்ற திரைப்படத்தில் இணைந்து

'அஜித் 61' படத்தில் 22 ஆண்டுகள் கழித்து அஜித்துடன் மீண்டும் இணையும் நடிகை!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாகவும்