close
Choose your channels

பிரபல நடிகரின் கொரோனா தடுப்பு நிதியுதவி ரூ.30 கோடியாக உயர்வு!

Tuesday, April 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகர் அக்சயகுமார் ஏற்கனவே கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாய் வழங்கினார் என்பது தெரிந்ததே. அதன்பின்னர் மும்பை மாநகராட்சியின் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க 3 கோடி ரூபாய் வழங்கினார். எனவே அவர் ரூ.28 கோடி நிதியுதவி செய்த நிலையில் தற்போது மேலும் ரூ.2 கோடி நிதியுதவி செய்துள்ளதால் அவருடைய மொத்த நிதியுதவி ரூ. 30 கோடியாக உயர்ந்துள்ளது.

சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மும்பை போலீஸ் தலைமை காவலர்களான சந்திரகாந்த் பென்டூர்கர் மற்றும் சந்தீப் சர்வ் ஆகிய இருவர் மரணம் அடைந்தனர். மரணம் அடைந்த இந்த இருவருக்கும் வீரவணக்கம் செலுத்தியதோடு உயிரிழந்த காவலர்களின் குடும்பத்துக்கு உதவும் வகையில் மும்பை போலீஸ் பவுன்டேஷனுக்கு 2 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார்.

அக்சயகுமாரின் இந்த உதவியை அடுத்து மும்பை போலீஸ் கமிஷனரான பரம்பீர் சிங் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் நகரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் உயிரை காக்க நிச்சயம் உங்களின் பங்களிப்பு பயன்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.