close
Choose your channels

உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள்: 4வது இடத்தில் '2.0' பட நடிகர்!

Thursday, August 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில வருடங்களுக்கு முன் உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் முதல் பத்து இடங்களில் அனைவரும் ஹாலிவுட் நடிகர்களாகவே இருப்பார்கள். ஆனால் தற்போது இந்தியாவில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பெரிய பட்ஜெட் படங்கள் அதிகம் தயாரிக்கப்படுவதால் இந்திய நடிகர்களுக்கும் ஹாலிவுட் நடிகர்களுக்கு கிட்டத்தட்ட இணையாக சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஃபோர்ப்ஸ் நிறுவனம் இந்த ஆண்டில் உலகின் அதிக சம்பளம் பெற்ற நடிகர்கள் குறித்த பட்டியலை அறிவித்துள்ளது. இதில் நான்காவது இடத்தில் பிரபல பாலிவுட் நடிகரும், ரஜினியின் '2.0' படத்தில் நடித்தவருமான அக்சயகுமார் பெயர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் முதலிடத்தில் ராக் என்கிற டிவானே ஜான்சன் உள்ளார். அவர் இவ்வருடம் $90 மில்லியன் சம்பளம் பெற்றுள்ளார். அவரை அடுத்து கிறிஸ் ஹெம்வொர்த் $77 மில்லியன் சம்பளமும், ஜூனியர் ராபர்ட் டவுனே $66 மில்லியன் சம்பளமும் அக்சயகுமார் $65 மில்லியன் சம்பளமும், ஜாக்கிசான் $58 மில்லியன் சம்பளமும் பெற்றுள்ளனர். அக்சயகுமர் பெற்ற $65 மில்லியன் என்பது இந்திய மதிப்பில் சுமார் ரூ.467 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.