close
Choose your channels

ராகவா லாரன்ஸ் அடுத்த படத்தில் '2.0' கனெக்சன்

Tuesday, January 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய முனி, முனி 2 காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் 'காஞ்சனா 3' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது. ஏற்கனவே மூன்று பாகங்கள் பெற்ற வெற்றியை இந்த படமும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 'காஞ்சனா' படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ராகவா லாரன்ஸ் முடிவு செய்திருப்பதாகவும், தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்த கேரக்டரில் அக்சயகுமார் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் வெளியான '2.0' படத்தில் பக்சிராஜாவாக நடிப்பில் அசத்திய அக்சயகுமார் மீண்டும் ஒரு தமிழ் இயக்குனர் படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும், காமெடி கலந்த த்ரில் கேரக்டரில் அக்சயகுமார் அசத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு 'காஞ்சனா 3' படம் ரிலீஸ் ஆனதும் ஏப்ரல் இறுதியில் தொடங்கவுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.