ஆளப்போறான் தமிழனின்' 100 மில்லியன் அசத்தல் சாதனை

  • IndiaGlitz, [Thursday,April 11 2019]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கிய 'மெர்சல்' திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக இந்த படத்திற்கு தமிழக பாஜகவினர் தெரிவித்த கருத்தால் இந்த படம் இலவச விளம்பரம் பெற்று சூப்பர்ஹிட்டாகியது

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த 'ஆளப்போறான் தமிழன்' பாடல் ஏறகனவே பல சாதனைகள் செய்துள்ள நிலையில் தற்போது இந்த பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தமிழ்ப்படத்தின் பாடல் ஒன்று 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருப்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது

இதுகுறித்த தகவல் தெரிந்த ஒருசில நிமிடங்களில் #100MForAalaporaanThamizhan என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகிவிட்டது. அதுமட்டுமின்றி இதற்காக விஜய் ரசிகர்கள் சிறப்பு போஸ்டர்களை அடித்து நகர் முழுவதும் ஒட்டி வருகின்றனர். ஆளப்போறான் தமிழன் போன்ற ஒரு பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 'தளபதி 63' படத்திலும் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.