close
Choose your channels

பாத் டப்பில் போட்டோஷுட் நடத்திய நடிகை ஆலியா பட்… வைரலாகும் புகைப்படம்!

Friday, February 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் ஆலியா பட் ஒரு வித்தியாசமான போட்டோஷுட்டை முயற்சித்து இருக்கிறார். இந்தப் புகைப்படம் வைரலான நிலையில் ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

பிரபல தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகளான ஆலியா பட் “2 ஸ்டேஸ்ட்“ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து “உத்தா பஞ்சாப், “ராஸி“, “கல்லி பாய்“ போன்ற திரைப்படங்கள் ஹிட் அடித்த நிலையில் தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். மேலும் இவர் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “ஆர்ஆர்ஆர்“ திரைப்படத்தில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதைத்தவிர மும்பை ரெட் லைட் ஏரியாவிற்கு முடிசூடா ராணியாக இருந்துவந்த கங்குபாயின் கதாபாத்திரத்தில் இவர் “கங்குபாய் கத்தியவாடி“ திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் இந்த மாதம் ரிலீசாகவுள்ள நிலையில் தொடர்ந்து அரை டஜன் திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

மேலும் ரன்பீர் கபூருடன் காதல், அவ்வபோது சுற்றுலா என்று பிசியாக இருந்துவரும் நடிகை ஆலியா பட் தற்போது பாத் டப்பில் படுத்தபடி ஒரு போட்டோஷுட்டை நடத்தியிருக்கிறார். பார்ப்பதற்கு குட்டி டால் மாதிரி இருக்கும் இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைஸ்குகளை குவித்து வருகின்றனர். மேலும் அவருடைய திருமணம் குறித்து கேள்வி எழுப்பி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.