close
Choose your channels

டாக்டர்களுக்கு சாக்லேட், ஆப்பிள் ஜூஸ் அனுப்பிய பிரபல நடிகை

Monday, May 18, 2020 • தமிழ் Comments

மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் டாக்டர்கள் அனைவருக்கும் பிரபல நடிகை ஒருவர் சாக்லேட், ஆப்பிள் ஜூஸ், ஸ்னாக்ஸ் ஆகியவற்றை அனுப்பியுள்ள செய்தி ஊடகங்களில் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கின்றது

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களுக்கும் அவர் சாக்லேட், ஸ்வீட் பன், ஆப்பிள் மற்றும் ஸ்னாக்ஸ் ஆகியவற்றை அனுப்பி உள்ளார். மேலும் அதில் ’தற்போது பொது மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்க நீங்கள் செய்து கொண்டிருக்கும் பணி மிகப்பெரியது என்றும், நீங்கள்தான் உண்மையான ஹீரோக்கள்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இதுகுறித்து அந்த மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஒருவர் தனது டுவிட்டரில் கூறியபோது ’ஸ்வீட், ஸ்னாக்ஸ் அனுப்பிய ஆலியாபட் அவர்களுக்கு மிகவும் நன்றி. எங்களுக்கு இது ஒரு இனிப்பான ஆச்சர்யம். இந்த கொரோனா நேரத்தில் இடைவிடாது பணி செய்து கொண்டிருக்கும் எங்களுக்கு இது ஒரு ஆச்சரியமாக அனுபவம். அனைத்து டாக்டர்கள் சார்பில் நான் உங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்

மும்பை மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் அனைவருக்கும் ஆலியா பட் ஸ்வீட், ஸ்னாக்ஸ் அனுப்பியுள்ள செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

Get Breaking News Alerts From IndiaGlitz