close
Choose your channels

வேலைக்கு 996, உடலுறவுக்கு 669: அலிபாபா நிறுவனரின் ஐடியா!

Tuesday, May 14, 2019 • தமிழ் Comments

உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்று அலிபாபா. சீன தொழிலதிபர் ஜாக் மா நிறுவனராக உள்ள இந்த நிறுவனம் ஆண்டுக்கு ஆண்டு அபார வளர்ச்சியை பெற்று வருகிறது. இவரது சொத்து மதிப்பு 40 மில்லியன் டாலரை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது நிறுவனத்தின் ஊழியர்கள் வேலையில் 996 என்ற கொள்கையையும், மனைவியுடனான உடலுறவில் 669 என்ற கொள்கையையும் கடைபிடிக்க வேண்டும் என்றும், அப்போதுதான் தனது நிறுவனமும் நன்றாக வளர்ச்சி அடையும், ஊழியர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

அதாவது வேலையில் 996 என்றால் ஒரு நாளைக்கு காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 12 மணி நேரம், வாரம் 6 நாட்களுக்கு உழைக்க வேண்டும் என்றும், அதேபோல் மனைவியுடன் வாரத்தில் 6 நாட்கள் 6 முறை இரவு 9 மணிக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்றும் பேசியுள்ளார். அலிபாபா நிறுவனரின் இந்த பேச்சு பெரும் விவாதத்திற்கு உரியதாக மாறியுள்ளது

Get Breaking News Alerts From IndiaGlitz