close
Choose your channels

அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் முக்கிய அறிவிப்பு!

Tuesday, September 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த போஸ்டரின்மீது ஒரு சில ரசிகர்கள் ரத்தத்தை தெளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து ரஜினி அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’அண்ணாத்த’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மீது உயிருள்ள ஆட்டின் கழுத்தை வெட்டி அதில் இருந்து பீறிட்டு வரும் இரத்தத்தை போஸ்டர் மீது தெளித்த வீடியோ இணையதளங்களில் வைரலானது. இந்த வீடியோவுக்கு மிகப்பெரிய கண்டனங்கள் குவிந்து வந்தது என்பதும் சம்பந்தப்பட்ட ரசிகர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தனது ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் இதுமாதிரி செய்யக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும் என்று நடுநிலையாளர்கள் கேட்டுக்கொண்டனர். அந்த வகையில் தற்போது அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தில் நிர்வாகி விஎம் சுதாகர் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ’அண்ணாத்த’ திரைப்படம் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மீது ஒரு சிலர் ஆடு வெட்டி ரத்த அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி மிகவும் வருந்தத்தக்கது. அருவருப்பான இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.